மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு 50,000 தடுப்பு ஊசிகள் கிடைக்கப் பெற்ற நிலையில் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரனின் வழிகாட்டலில் நடைபெற்று வருகின்றது.
வாழைச்சேனை
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்திற்கான சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டுள்ளன.
கோவிட் -19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களுக்கான சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
கோறளைப்பற்று
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் முதலாம் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இரண்டாம் கட்டத்திற்கான கோவிட் - 19 தடுப்பூசிகள் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்கு முதலாவது கோவிட் -19 தடுப்பூசிகள் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மற்றும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் வித்தியாலயம் என்பவற்றில் தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டுள்ளது.
கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஓட்டமாவடி
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்தவகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அறுபது வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கு இரண்டாம் கட்டத்திற்கான கோவிட் -19 தடுப்பூசிகள் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்கு முதலாவது கோவிட் -19 தடுப்பூசிகள் மிராவோடை அல் ஹிதாயா தேசிய பாடசாலையில் இன்று ஏற்றப்பட்டது.
கோவிட் -19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்முனை மேற்கு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய பிரிவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிட் சினோபாம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வியாழக்கிழமை (08) தினம் காஞ்சிரங்குடா, பன்சேனை, கொத்தியாபுலை, இலுப்படிச்சேனை, நரிப்புல்தோட்டம், மகிழவட்டவான், ஆயித்தியமலை -வடக்கு, ஆயித்தியமலை - தெற்கு ஆகிய கிராம பிரிவுகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.















தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
