பேரம் பேசும் சக்திகளாக அல்லாமல் அரசின் பங்காளிகளாக மாறுங்கள்! தமிழ்ப் பிரதிநிதிகளிடம் மதனவாசன் வேண்டுகோள்
ஆட்சியின் பங்காளர்களாகவும் உரிமைக்காக உரிமைகளோடு சேர்ந்து பயணிக்க கூடியவர்களாகவும் தமிழ் மக்கள் இருக்க வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதம அமைப்பாளர் ப.மதனவாசன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம்(77) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
''தூர நோக்குடன் பயணிக்க வேண்டிய தேவை தற்போது எமது தமிழ் சமூகத்திற்கு இருக்கின்றது. தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது.
பேரம் பேசும் சக்தி என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஆட்சியின் பங்காளராக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் உரிமைக்காக உரிமைகளோடு சேர்ந்து பயணிக்க கூடியவர்களாக தமிழ் மக்கள் இருக்க வேண்டும் அதனுடைய ஒரு பயணமாக தான் எமது கட்சியின் வளர்ச்சி காணப்படுகிறது.
2015ஆம் ஆண்டு தோல்விக்கு பின்னர் நாங்கள் துவண்டு விடவில்லை. அதன் பின்னர் உள்ளூராட்சி தேர்தல் மூலம் மீண்டு எழுந்துள்ளோம். தற்போதும் நாம் அவ்வாறான சூழலில் இருக்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.