நாட்டில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள புதிய திட்டம்
நாட்டில் கோவிட் தொற்றானது தீவிர நிலையை அடைந்ததையடுத்து பல தரப்பினரினதும் கோரிக்கைக்கு அமைவாக இலங்கையில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் உள்நாட்டு நோயெதிர்ப்பு வலுப்படுத்தும் மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் கஞ்சியை வழங்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஆயுர்வேத துறையின் ஒழுங்கமைப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட, மருந்து பெட்டியை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்குவதற்கு சுகாதார அமைச்சரால் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்மொழியப்பட்ட திட்டத்தின் முதல் கட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் வருமானத்தை இழந்த 25 லட்சம் குடும்பங்களுக்கு மருந்து பெட்டியை வழங்கவும், இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள குடும்பங்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam