இந்தியா அரசாங்கத்தின் தவறுகள் காரணமாகவே கோவிட் பரவல்! நாடாளுமன்றில் குற்றச்சாட்டு
இந்தியாவில் மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கோவிட் மரணங்கள் குறைவானதாகவே உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் எதிர்க்கட்சி இதில் அரசியலை புகுத்துகின்றது என்று அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.
இந்தியாவில் அரசாங்கத்தின் சில தவறுகள் காரணமாகவே கோவிட் பரவல் ஏற்பட்டது. எனினும் இலங்கையில் அவ்வாறான நிலைக்கு அரசாங்கம் வழியேற்படுத்தவில்லை.
இதனை எதிர்க்கட்சி பார்ப்பதில்லை அவர்கள் எப்போதும் அரசாங்கத்துக்கு விரோதமாகவே செயற்படுகிறார்கள். கோவிட் தடுப்புசிகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் வினாக்களைத் தொடுக்கிறார். அவர் வேலையின்றி இருப்பதால் அது சாத்தியமாகின்றது.
கோவிட் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலைகளின் போது அரசாங்கம் 78 லட்சம் மக்கள் 5000 ரூபா வீதம் பல பில்லியன் ரூபாவை வழங்கியிருக்கின்றது.
பொருளாதார ரீதியில் நாடு மூடப்பட்டுள்ள நிலையில் இது அரசாங்கத்தின் பாரிய
சேவையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் .இலங்கையில் 14ஆயிரம் கிராம சேவையாளர் பிரிவுகள் இருக்கின்ற நிலையில் இதனை
மேற்கொள்வது என்பது சாதாரணக்காரியமல்ல என்றும் ரோஹித்த அபேகுணவர்த்தன
தெரிவித்தார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
