தனிநபர் வீட்டு திட்டம் தொடர்பில் அரசாங்கம் விசேட அறிவிப்பு!
இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதன் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தனிநபருக்கும் வீட்டு உரிமையை வழங்குவதாகும் அந்த சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, முன்னுரிமை அடிப்படையில் உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு மில்லியன் மக்கள்
தற்போதைய நிலவரப்படி, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வசதியான வீட்டு உரிமை இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 65,000 பேர் கொழும்பு மாநகரப் பகுதிக்குள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி அந்தந்த பகுதிகளை உள்ளடக்கிய வகையில் வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த நோக்கத்திற்காக மக்கள்தொகை மற்றும் வ கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam