மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச தலைமை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடாத்த அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் தேசிய பொறுப்பாக கருதி எதிர்வரும் 20ம் திகதி போர் நினைவுத் தூபிக்கு அருகாமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் நடைபெறவுள்ள தேசிய படைவீரர்கள் நினைவு நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரிடம் கோரிக்கை விடுப்பதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
