நான் உயிருடன் இல்லாத காலத்திலும் இது நடக்க வேண்டும்: மகிந்தவின் எதிர்பார்ப்பு
அனைத்து இலங்கையர்களின் தாயகமும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இருக்க வேண்டும் என்பதே தனது ஒரே பிரார்த்தனை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தான் உயிருடன் இல்லாத காலப்பகுதியிலும் இந்த நிலைமை நீடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய யுத்தம் முடிவடைந்து இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இது குறித்து, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மூன்று தசாத்தங்களாக நீடித்த போர்
அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்று தசாப்தங்களாக நீடித்த ஒரு கசப்பான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, வீரமிக்க போர் வீரர்கள் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களைத் தியாகம் செய்த நாடு இலங்கை.
நமது வீரமிக்க போர் வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து பாதுகாத்த அந்த மகத்தான, சுதந்திரமான தாய் நாட்டை நான் மண்டியிட்டு வணங்கினேன்.
இனிமேல், நான் உயிருடன் இல்லாவிட்டாலும், நம் தாய்நாடு ஒரே சிங்கக் கொடியின் நிழலின் கீழ் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருக்கட்டும்! என்னுடைய ஒரே ஆசை அது தான் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
