ஊடக உள்ளடக்கத்தால் பாதிக்கப்படும் குடிமக்களின் உரிமைகள்: நளிந்த ஜயதிஸ்ஸ
ஊடக உள்ளடக்கத்தால் பாதிக்கப்படும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை பத்திரிகை பேரவையினால் நடத்தப்பட்ட 10வது “ஊடக ஆய்வுகள் மற்றும் பத்திரிகை டிப்ளோமா” திட்டத்தின் பட்டதாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
குடிமக்களின் உரிமைகள்
சமூக மற்றும் பிற டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் பரவும் உள்ளடக்கத்தின் தாக்கத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க புதிய சட்டங்கள் வரைவு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“ஊடகங்களால் பாதிக்கப்படும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் இப்போது கவனம் செலுத்தப்பட வேண்டும், என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படும் தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும், பொருத்தமான சட்டம் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




