முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அஸ்வெசும வழங்கத் தயார்! அமைச்சர் வசந்த பகிரங்கம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வாழ்வதற்கான பொருளாதார வசதி இல்லாவிட்டால் அவர்களுக்கும் அஸ்வெசும வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க கிண்டலடித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் மற்றும் ஓய்வூதியத்தை ரத்துச் செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள்
அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதியொருவர் ஓய்வு பெற்றுக் கொண்ட பின்னரும் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அவரைப் பராமரிக்கும் தேவை இல்லை.
அவ்வாறான நடைமுறையை நாங்கள் இல்லாதொழிப்போம். அது மாத்திரமன்றி ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியத்தையும் நாங்கள் ரத்துச் செய்வோம்.
அவ்வாறு நடைபெற்ற பிறகு ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளில் எவருக்கேனும் வாழ்க்கைச் செலவுக்கான பொருளாதார வசதி இல்லாத நிலை காணப்பட்டால் அவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நலன்புரிக் கொடுப்பனவொன்றைப் பெற்றுக் கொடுக்கவும் நாங்கள் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் திருவிழா




