மருத்துவமனைகளில் பதிவான சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை
நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இடம்பெற்ற சந்தேகமான மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விசாரணை அறிக்கைகளை பொதுமக்களுக்கு வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு மேலும் கோரப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் நிகழ்ந்த சந்தேகமான மரணங்கள் குறித்து நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் ஊடகங்கள் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்விடயத்தில் விரிவானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அந்தக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.
சில வகை மருந்துகளை பயன்படுத்தியதனால் மருத்துவமனைகளில் மரணங்கள் பதிவானதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.