வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்ட இலக்கு! அரசாங்கம் வெளியிட்ட தகவல்
இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் வாகன இறக்குமதி மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்ட இலக்கில் 72% எட்டப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிடம் (COPA) தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 5ஆம் திகதிக்குள் மொத்த வருவாய் ரூ. 316 பில்லியனை எட்டியுள்ளது எனவும் இது திட்டமிடப்பட்ட இலக்கில் 72% என்றும் நிதியமைச்சின் நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் கபில சேனநாயக்க தெரிவித்தார்.
ஆண்டு வருவாய்
கடந்த 6 ஆம் திகதிக்குள், 1,72,292 வாகனங்களுக்கு அமெரிக்க டொலர்களில் 1,278 நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பிரதிச் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு வருவாயை இரட்டிப்பாக்கி, இலக்கில் 150% ஐ எட்ட முடியும் என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், தற்போதைய போக்குகளின் அடிப்படையில், வருவாய் ரூ. 450 பில்லியனை தாண்டக்கூடும் என்று ஏ.கே. செனவிரத்ன குறிப்பிட்டார்.




