பளை பொதுச்சந்தை வளாகத்தில் கோவிட் தொற்று - பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை
கிளிநொச்சி -பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பளை பொது சந்தை வளாகத்தில் புடவைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு எழுமாறாக எடுக்கப்பட்ட பி .சி. ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கோவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டமையால் நேற்றைய தினம் பளை பொது சந்தை வளாகத்தில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நபர் மிருசுவில் பகுதியில் இருந்து பேருந்தில் பளைக்கு வருகின்றமையுடன் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டமையால் குறித்த நபர் சுய தனிமைப்படுத்தபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்துக்கு உட்பட்ட சோரன்பற்று கிராம மக்கள்
,சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
