இலங்கையில் கோவிட் - 19 மரணங்கள் பற்றிய தகவல்களில் திருத்தம்
கோவிட் - 19 மரணங்கள் தொடர்பில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களின் பிரகாரம் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றது.
இந்த நிலையில், நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் பிழை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 1ம் திகதி அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கோவிட் - 19 மரணங்களில் இரண்டு மரணங்கள் பற்றிய விபரங்கள் 2ம் திகதியான நேற்றைய தினமும் உள்ளடக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் திகதி அறிக்கையின் இலக்கம் 6 மற்றும் 7 ஆகிய மரணங்கள் பற்றிய விபரங்கள், தவறுதலாக இரண்டாம் திகதி அறிக்கையில் 3ம் மற்றும் 5ம் மரணங்களாக மீளவும் பதிவிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றைய தினத்தில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 330 ஆக பதிவாகியிருந்த போதிலும் உண்மையில் அது 328 ஆக பதிவாகியிருக்க வேண்டுமென சுகாதார சேவைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
