அப்பாவி மக்களிடம் வரி அறவீடு செய்து திறைசேரியை நிரப்புவதாக அரசாங்கம் மீது குற்றச்சாட்டு
மக்களிடம் வரி அறவீடு செய்து திறைசேரியை நிரப்பும் அரசாங்கம் அப்பாவி மக்களிடம் வரி அறவீடு செய்து இந்த அரசாங்கம் திறைசேரியை நிரப்புவதாக சர்வஜன பலய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
திறைசேரியை நிரப்பியுள்ளதாக அரசாங்கம் கூறிய போதிலும் அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 50 வீதமான வருமானம் அப்பாவி மக்களிடம் பெறப்பட்ட வரியாகும் என கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஊழல் மூலம் திரட்டிய பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றைக் கொண்டு வந்து மக்களுக்கு நலன்களை வழங்க முடியும் எனவும் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புக்கள் சில வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த அரசாங்கம் ஊழல் மோசடிகளுக்கு எதிராக எதனையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
களவாடப்பட்டதாக கூறப்படும் ஒரு ரூபாவையேனும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் நெஞ்சில் ஈரமின்றி அப்பாவி மக்களிடம் வரி அறவீடு செய்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டை ஒரு அங்குலமேனும் முன்னோக்கி நகர்த்த முடியாத அரசாங்கம் கொழும்பில் பேரணிகளை ஏற்பாடு செய்ததாக திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri