நுரைச்சோலை அனல் மின்நிலைய சாம்பல் விற்பனையில் பாரிய நட்டம்
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் சேகரிக்கப்படும் சாம்பல் விற்பனை மூலம் அரசாங்கம் பாரிய நட்டமொன்றை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியிருக்கும் சாம்பல், சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடியதாகும்.
இந்த சாம்பல், தொன் ஒன்று 13,300 ரூபா வரை கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டது இந்நிலையில் கடந்த மே மாதம் அவசர விலைமனுக் கோரல் மூலம் தற்போதைக்கு ஒரு தொன் சாம்பல் 2,900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
விற்பனையில் பாரிய நஷ்டம்
இதன் மூலமாக அரசாங்கத்திற்கு 78 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு இந்த விலை மனுக்கோரல் விடப்பட்டுள்ளது. இதன்படி 36 மாதங்களில் அரசாங்கத்திற்கு 6.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பாரியளவிலான சீமெந்து வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |