நாட்டின் இறையாண்மையை காட்டிக் கொடுத்த அரசாங்கம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை காட்டி கொடுத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சி கல்வி பிரிவு செயலாளர் புபுது ஜாகொட இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்குள் இந்திய போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் தொழிற்சாலை ஒன்று தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் ஒப்பந்தங்கள்
அண்மையில் இந்தியாவுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்களை அமைச்சரவை அமைச்சர்கள் கூட கண்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிந்த அமைச்சர்கள் பலர் இந்த விடயத்தை உறுதி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களை கைச்சாதிட்டு உள்ளதாக அறிவித்தபோதிலும் இந்திய ஊடகங்கள் 10 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவித்துள்ளன.
இந்திய போர் ஆயுத உற்பத்திசாலை, போர் களஞ்சியசாலை என்பவற்றை இலங்கையில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பாதுகாப்பு செயலாளர் அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் என புபுது ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையான நிலைமைகள்
இந்த தகவல்கள் பொய்யாக இருந்தால் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து சரியான தகவல்களை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையான நிலைமைகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்திய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளராக செயல்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த உடன்படிக்கைகளினால் பிராந்திய வலயத்தில் இலங்கை பாரிய போர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும், சுதந்திரத்தின் பின்னர் எந்த ஒரு அரசாங்கமும் இலங்கையின் இறையாண்மையை இவ்வாறு காட்டிக் கொடுத்ததில்லை என புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
