ஜனாதிபதியின் மேதின வாழ்த்துச் செய்தி
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்துவதன் மூலம் அரசாங்கம் ஒரு நிலையான தொடக்கத்தை எட்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன, மத வேறுபாடின்றி..
1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது.
இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
76 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இன, மத வேறுபாடின்றி இந்நாட்டின் அனைத்து மக்களும் செயல்பட்டனர்.
அந்த மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து, நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி செயலாற்றுகிறது.
ஊழல் நிறைந்த, சிறப்புரிமை அரசியல் முறைமையால் பாதாளத்திற்குள் தள்ளப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தை, மீட்டெடுத்து நிலையான ஆரம்பத்தை ஏற்படுத்துவதில் தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
