புதுக்குடியிருப்பில் கோவிட் விழிப்புணர்வு நடவடிக்கை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தாய் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் மக்களுக்கான கோவிட் விழிப்புணர்வு நடவடிக்கையின் தொடக்க நிகழ்வினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்த தொடக்கி வைத்துள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கிலும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தாய் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் தொடக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாட்டில் கோவிட் தொற்றால் உயிரிழந்த மக்கள் நினைவாகச் சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டு கோவிட் விழிப்புணர்வு நடவடிக்கை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந், மாவட்ட செயலக கணக்காளர் கே.றெஜினோல்ட், புதுக்குடியிருப்பு பிரதேச ஆதார வைத்தியசாலை வைத்தியர் தயானந்தறூபன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உபதவிசாளர் க.ஜெனமேஜெயந், வணிகர் சங்கத் தலைவர் நவநீதன், புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பிரதி பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாகக் கிராமங்கள் தோறும் மக்களுக்கான
விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் மற்றும் முகக்கவசம் என்பன
வழங்கிவைக்கப்படவுள்ளதுடன், ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு கருத்தூட்டலும்
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
