வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்
வட மாகாணத்தில் GovPay வழியாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம், GovPay ஊடாக போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதியை செயல்படுத்தும் இலங்கையின் மூன்றாவது மாகாணமாக வட மாகாணம் திகழ்கின்றது.
இவ் உத்தியோகபூர்வ நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

விழிப்புணர்வு அமர்வுகள்
அதேசமயத்தில், வட மாகாணத்தில் உள்ள 6 போக்குவரத்து பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தொடர் விழிப்புணர்வு அமர்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது வட மாகாணத்தில் உள்ள வாகன சாரதிகள் தற்போது GovPay உடன் இணைக்கப்பட்ட எந்தவொரு இணையத்தள அல்லது மொபைல் வங்கி செயலி அல்லது டிஜிட்டல் கட்டண செயலி மூலமாக, குறித்த இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களை செலுத்த முடியும்.


