இலங்கையில் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Driving Licence
By Mayuri Apr 11, 2025 12:37 PM GMT
Report

அபராத பத்திரத்திற்கு மேலதிகமாக Govepay வழியாக அபராதத்தை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த துண்டுப்பிரசுரத்தையும் வழங்கவுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் ஹர்ஷ புரசிங்க சாரதிகளுக்கு தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத சீட்டினை சாரதிகள் ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் குறித்து இன்று (11) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றிருந்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பணம் செலுத்துவது குறித்து விளக்கம்

மேலும் தெரிவிக்கையில், அந்த துண்டுப் பிரசுரத்தில் எவ்வாறு பணம் செலுத்துவது என்பது குறித்து படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் வங்கி வசதி அல்லது வங்கி மொபைல் செயலி மூலம் உடனடியாக இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

இலங்கையில் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு | Govpay In Sri Lanka Traffic Police Fine

Govepay தேர்ந்தெடுக்கப்படும் போது, ​​முன்னர் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு கூடுதலாக, இலங்கை பொலிஸை தேர்ந்தெடுத்து ​​அங்கு போக்குவரத்து அபராத பகுதிக்கு சென்றால் அபராதத்தை செலுத்தும் படிவம் டிஜிட்டல் முறையில் காட்டப்படும்.

நீங்கள் அங்கு தேவையானவற்றை நிரப்ப வேண்டும். உங்கள் வாகன இலக்கத் தகட்டின் எண், சாரதி அனுமதிப் பத்திர எண், அபராத பத்திரத்தில் உள்ள குறிப்பு எண் மற்றும் அனைத்து குற்றங்களையும் பட்டியலிடும் ஒரு கீழ்தோன்றும் பட்டியல் உள்ளது, அதில் இருந்து உங்களுக்கு எந்தக் குற்றம் பொருந்தும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் நாங்கள் விசேட பணியைச் செய்தோம்.

இலங்கையின் பல வருட வரலாற்றை மாற்றியமைக்கும் ஜனாதிபதி அநுர

இலங்கையின் பல வருட வரலாற்றை மாற்றியமைக்கும் ஜனாதிபதி அநுர

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறும் வழிமுறை

இப்போது ஒருவருக்கு இரண்டு அபராதங்களை விதிக்க முடியும். நீங்கள் இரண்டு அல்லது மூன்று தேர்வு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படும்போது, ​​தொகை தானாகவே காட்டப்படும். ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் மொபைல் போன்களை வழங்கியுள்ளோம். அந்த எண்ணை உள்ளிட்டு பணம் ​​செலுத்தப்படல் வேண்டும்.

இலங்கையில் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு | Govpay In Sri Lanka Traffic Police Fine

உடனடியாக ஒரு ரசீது அனுப்பப்படும். பணம் பெறப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில், Govepay என்ற குறுகிய குறியீட்டின் கீழ், பொலிஸ் அதிகாரி உடனடியாக ஒரு குறுஞ்செய்தியைப் பெறுவார். அந்த செய்தியில் எல்லா விபரங்களும் உள்ளன. பின்னர் நீங்கள் உங்க சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முடியும் என்றார்.

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸார் குவிப்பு

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸார் குவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US