யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பொலிஸார் குவிப்பு
யாழ்ப்பாணம் (Jaffna), மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் நேற்றைய தினம் (10) காலை நடைபெற்றுள்ளது.
கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடுமையான உடற்சோதைனைக்கு...
இந்நிலையில் ஆலயத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியர் வருகை தரவுள்ளதாக தெரிவித்து, ஆலய சூழலில் பெருமளவான பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிபடையினர், பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் ஆலய வழிபாட்டிற்கு வருகை தந்த குருக்கள்மாரையும் பக்தர்களையும் கடுமையான உடற்சோதைனைக்கு உட்படுத்தியே ஆலய வளாகத்தினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் ஆலயத்திற்கு செல்வோர் இன்னல்களை எதிர்கொண்டனர்.
கும்பாபிஷேக பெருவிழாவிற்கு வருகை தந்த தம்மை இவ்வாறு இன்னல்படுத்துவதற்கு பலரும் விசனங்களை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாடுவதையும் அவதானிக்க முடிந்தததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Optical Illusion:'325' மற்றும் '235' என்ற இலக்கங்களுக்கிடையில் இருக்கும் வித்தியாச எண் என்ன? Manithan
