முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான அறிவித்தல்
நேற்றிரவு காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி கிரியை தொடர்பான தகவல்களை குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
நீண்ட காலமாக உடலநலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தமது 69 வயதில் நேற்று (14) இரவு காலமானார்.
இறுதிக்கிரியைகள்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 16.11.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு, அவர் வசித்து வந்த வல்வெட்டித்துறை, நெடியகாடு, கல்றோட் வீதியிலுள்ள இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து, நண்பகல் 12.00 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அஞ்சலி உரைகளும் இடம்பெறவுள்ளது.
இதன் பின்னர், அன்னாரின் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளது.
அன்னாரின் பூதவுடல் தற்போது வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழ்த்தேசியப் பற்றாளரின் இறுதிப் பயணத்தில் அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசியத்துக்காக அரை நூற்றாண்டு காலம் ஓயாது ஒளிவீசிய விடுதலை சுடர்! சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இரங்கல்