பௌத்தமயமாக்கல் நடைபெறாது..! அநுர அரசாங்கம் வாக்குறுதியை மீறியதாக கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Rusath Apr 17, 2026 11:33 AM GMT
Report

வடகிழக்கு மாகாணம் பகுதியில் தற்போது தமிழ் தேசியக் கட்சிகளுக்கு 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் தேசிய மக்கள் சக்திக்கு 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உணர்ந்து கொண்டு தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இரணைதீவு கடற்பரப்பில் கைதான இந்திய கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

இரணைதீவு கடற்பரப்பில் கைதான இந்திய கடற்தொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று(17.04.2026) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் மாறி மாறி இந்த நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களைப் போலவே, தற்போதைய அரசாங்கமும் நடந்து கொள்கிறது.

பௌத்தமயமாக்கல் நடைபெறாது..! அநுர அரசாங்கம் வாக்குறுதியை மீறியதாக கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு | Govindan Karunakaram Allegation

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளை வழங்கியது. குறிப்பாக, வடக்கு - கிழக்கு மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என அவர்கள் தெரிவித்தனர்.

35 வருடங்களுக்கு மேல் போராடும் கைதிகள்

சிறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றும், இலங்கை பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்போம் என்றும் கூறப்பட்டது.

அதேபோல், மத அடிப்படையில் வடக்கு - கிழக்கில் விகாரைகள் அமைக்கப்படாது, பௌத்தமயமாக்கல் நடைபெறாது என்றும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், இதுவரை அவற்றில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டதாகவே கருதுகிறோம்.

பௌத்தமயமாக்கல் நடைபெறாது..! அநுர அரசாங்கம் வாக்குறுதியை மீறியதாக கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு | Govindan Karunakaram Allegation

முந்தைய அரசுகளைப் போலவே தற்போதைய அரசும் அதே போக்கில் செயல்படுகிறது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

அதேவேளை, தமிழ் தேசியக் கட்சிகள் இன்றும் ஒருமித்த நிலைப்பாட்டில் இல்லாமல் பிரிந்து செயற்படுவது, தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சிலர் கருதுகின்றனர்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வடக்கு - கிழக்கில் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களிடையே ஒருமைப்பாடு காணப்பட்டது. அது அந்த சூழ்நிலையில் அவசியமானதாகவும் இருந்தது. ஆனால் 2009 க்கு பின்னர், தமிழ் தேசியக் கட்சிகள் தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறி பல பிரிவுகளாகப் பிரிந்துவிட்டனர். இது ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை அல்ல என குறிப்பிட்டுள்ளார்.  

தையிட்டி காணி அளவீடு நிறுத்தப்பட்டது! களத்தில் குழப்ப நிலை..

தையிட்டி காணி அளவீடு நிறுத்தப்பட்டது! களத்தில் குழப்ப நிலை..

ஆட்டம் காணும் தங்கத்தின் விலை - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்

ஆட்டம் காணும் தங்கத்தின் விலை - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US