ஆட்டம் காணும் தங்கத்தின் விலை - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (17.04.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 368000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சிறிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.26 சதவீத சரிவுடன் 4,786 டொலராகக் உள்ளது.
அதேநேரம் நேற்றைய தினம் சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4830.68 டொலராக பதிவாகியிருந்தது.
வெள்ளியின் விலை
இதேவேளை, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் குறைந்து 78 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி நேற்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 402000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 369900 ரூபாவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan