தையிட்டி காணி அளவீடு நிறுத்தப்பட்டது! களத்தில் குழப்ப நிலை..
யாழ். தையிட்டி பகுதியில் அமைந்துள்ள காணிகளுக்கான அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, இன்றையதினம்(17) காணி அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், இன்றையதினம் காணி அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் களத்தல் சற்று குழப்ப நிலை ஏற்பட்டிருந்ததுடன், காணி அளவீட்டு பணிகளும் தாமதமாகியிருந்தன.
காணி அளவீடு..
தொடர்ந்து நிலவிய குழப்ப நிலையை அடுத்து, தற்போது காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகள் இன்று நில அளவைத் திணைக்கள அதிகாரிகளால் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.

காணி அளவீடுகள் நிறைவடைந்ததும், உரிய ஆவணங்களின் அடிப்படையில் காணி உரிமையாளர்கள் யார் என்பது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam