கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முதலாம் தர மாணவர்களின் இரண்டாம், மூன்றாம் தவணைகளுக்குரிய பயிற்சி நூல்களை விநியோகிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நூல் விநியோகம்
எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்குள் அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த நூல்களை விநியோகித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் மாகாண ஆரம்பக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
மேலதிகமாக தேவைப்படும் பயிற்சிகளை மே 16ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு மாகாணப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை நிறைவு
முதலாம் தவணைக்குரிய பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத பாடசாலைகள் இருப்பின், அவற்றை இரண்டாம் தவணையில் நிறைவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய சீர்திருத்தங்கள் மூலம் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும், நவீன கல்வி முறையை அறிமுகப்படுத்தவும் அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri