இலங்கையில் அடுத்தடுத்து நடக்கும் சோகம் - 50இற்கும் மேற்பட்டோர் பலி - இன்றும் 6 சடலங்கள் மீட்பு
குருநாகல் - நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்த மேலும் ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. 10 பேர் கொண்ட குழுவினர் நீராட சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தேடுதல் பணிகள்
மேலும் இருவரைக் காணவில்லை எனத் தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கிய நிலையில் இருந்த மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் பிரதேச மக்களும் பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீரில் மூழ்கி பலி
கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாடாளவிய ரீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவங்களில் 50இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

இவர்களில் 24இற்கு மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நீந்தத் தெரியாததாலும், குளிப்பதற்கும் பொழுதுபோக்குவதற்கும் மிகவும் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்றமையினால் இந்த துயர சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தரவிடப்பட்டால் பெரும் தாக்குதல்! தயார் நிலையில் அமெரிக்கப் படைகள் - ஈரானுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan