சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை புறக்கணிக்கும் அரசாங்கம்! ரிஷாட் காட்டம்
நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட எந்தவொரு சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதாக வரலாறுகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா சமர்ப்பித்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான பிரேரணையில் உரையாற்றியபோதே ரிஷாட் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்வுகாண முடியாது. எந்த அரசாங்கமானாலும் எமது சமூகங்களின் பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிக்குமே தவிர, தீர்த்து வைக்க முயற்சிக்காது.
கடந்தகால அனுபவங்கள்
கடந்தகால அனுபவங்களூடாக நாங்கள் புரிந்து வைத்துள்ள உண்மையே இது ஓட்டமாவடி பிரதேச சபையை எமது கட்சியே வென்றிருந்தது. எனினும் எங்களை ஆட்சியமைக்க விடாமல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன.
இவ்விடயத்தில் ஏற்பட்ட புரிந்துணர்வுபோன்று ஏனைய காணிப்பிரச்சினை மற்றும் கல்விப் பிரச்சினைகளில் ஏன் இவர்களால் ஒன்றுபட முடியாது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் சமூங்களின் அக முரண்பாடுகளை பேசித்தீர்க்க முடியும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தையும் இழுத்தடிக்க வேண்டியதில்லை. சமூகத் தலைமைகள் இணைந்தால் இதையும் இலகுவாகத் தீர்க்கலாம்” என்றார்.





காவேரியை சுக்கு நூறாக உடைக்கும் விஷயத்தை தந்திரமாக செய்த பசுபதி, எப்படி சமாளிக்கப்போகிறார்... மகாநதி சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
