மகிந்த வீட்டில் மற்றுமொருவர் அதிரடியாக கைது! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனத்திடமிருந்து தரமற்ற கரிம உரத்தை இறக்குமதி செய்தமையினால் அரசாங்கத்திற்கு நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு
இது தொடர்பான விசாரணை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சஷீந்திர ராஜபக்ச இன்று அழைக்கப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தில் பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் சஷீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
