திருகோணமலை பொது வைத்தியசாலை இடமாற்றம் செய்யும் இடத்தினை பார்வையிட்ட ஆளுநர் (Photos)
திருகோணமலை பொது வைத்தியசாலையை இடமாற்றம் செய்ய அரசாங்கம் தீர்மானித்ததையடுத்து பொருத்தமான இடமொன்றை தெரிவு செய்வதற்கான கள ஆய்வினை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் (Anuradha Yahampath )தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று (31) மாலை விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளனர்.
சர்தாபுரா பகுதியில் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு ஏற்றது என சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டதையடுத்தே திருகோணமலை சர்தாபுர பகுதி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை, சர்தாபுர பகுதியில் நவீன வசதிகளுடன் அமைப்பதற்காக ஐம்பது ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐம்பது ஏக்கர் காணிக்கான சகல ஆவணங்களும் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் விரைவில் கையளிக்கப்படவுள்ளன. இதற்கான பணிப்புரையை கிழக்கு மாகாண ஆளுனர் விடுத்துள்ளார்.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத யகம்பத்
நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள, திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாண்டிக்கோரல, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திருகோணமலை வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோர்
கலந்துகொண்டனர்.




தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
