வவுனியாவில் கண் மருத்துவமனை ஆளுநரால் திறந்துவைப்பு
வவுனியாவில் கண் மருத்துவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றை வடக்கு மாகாண ஆளுநர்.பி.எம்.எஸ். சாள்ஸ் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன கலந்து கொண்டிருந்தார்.
வவுனியா மரக்காரம்பளையில் அமைந்துள்ள ஆனந்தி பால்பொருள் உற்பத்தி நிறுவனம் மற்றும் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள ஆனந்தி கண் மருத்துவமனை ஆகியன அந்நிறுவனத்தின் பணிப்பாளரும், வைத்தியருமான வேலாயுதம் சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், இரண்டு நிறுவனங்களையும் திறந்து வைத்து அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டிருந்தனர்.
நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன், வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன் மற்றும் வவுனியா வர்த்தக சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
