மும்மொழிகளிலும் சம உரிமைகளை வலியுறுத்திய ஆளுநர் நஸீர் அஹமட்
தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின வைபவத்தில் இராணுவம், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் சிறுபான்மை மக்களின் உரிமை குறித்து வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் (Naseer Ahamed) மும்மொழிகளிலும் உரையாற்றி வலியுறுத்தியுள்ளார்.
வடமேல் மாகாண தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை குருநாகல் மாநகர வெலகெதர மைதானத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இனக்குழுவின் உரிமை
மேலும் குறிப்பிடுகையில், “இராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து நாட்டில் அமைதி, சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. அந்த அமைதி, சமாதானம் தொடர்ந்தும் நாட்டில் நிலவ வேண்டுமாக இருந்தால் அனைத்து மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு சம அந்தஸ்து மற்றும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
இந்த நாடு அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்ற வகையில் ஒரு இனக்குழுவின் உரிமையை இன்னொரு இனக்குழு நிராகரிக்க முடியாது.
அனைவரும் இணைந்து வாழ்ந்தால் மட்டுமே இந்த நாட்டில் சுபீட்சம், சௌபாக்கியம் ஏற்படும்” எனும் தொனிப்பட ஆளுநர் நஸீர் அஹமட் மும்மொழிகளிலும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த இராணுவத்தினர் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் நிகழ்வின் பின்னர் ஆளுநரது உரை குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின வைபவமொன்றில் மும்மொழிகளிலும் உரை நிகழ்த்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |