விவசாயிகளை அரசியல் கையாள்களாக்க முடியாது - மகிந்த அமரவீர
அரசாங்கம் திட்டமிடப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதால் இனிமேல் விவசாயிகளை அரசியல் கையாள்களாக்க முடியாது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2021 பெரும்போகத்தில் உர நெருக்கடி காரணமாக, நெல் உற்பத்தி தடைப்பட்டது. எனவே 2022ஆம் ஆண்டு இந்நாட்டு மக்களின் நுகர்வுக்குப் போதுமான அரிசி உற்பத்தி செய்யப்படவில்லை.
தேவையான உரம்
அதன் மூலம் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவை தாண்டும் என சிலர் ஊடக சந்திப்புகளில் தெரிவித்தனர்.
ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தலைமையிலான அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் உள்நாட்டு நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தன.
2022 சிறு போகத்திற்கு தேவையான யூரியா உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும், பெரும் போகத்தில் நெல் உற்பத்திக்கு உரம் கொள்வனவு செய்ய ஹெக்டெயருக்கு 20,000 ரூபா நிதி மானியம் வழங்கப்பட்டது.
மேலதிகமான அரிசி
இதன் விளைவாக, 2023ஆம் ஆண்டில் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படவிலை. 2023ல் இலங்கையில் நெல் உற்பத்தி 4.5 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும்.
நம் நாட்டில் ஆண்டுக்கு 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி தேவை. 2023ஆம் ஆண்டில், நெல் அறுவடையில் இருந்து சுமார் 03 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை உற்பத்தி செய்தோம். அதன்படி கடந்த ஆண்டு நம் நாட்டில் அரிசி மேலதிகமாக இருந்தது.
விவசாயிகள்
எங்களை நம்பி எமது அறிவுரைப்படி செயற்பட்டனர். அதனால்தான் இந்த நாட்டில்
இன்னும் அரிசி மேலதிகமாக இருக்கிறது" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |