வடக்கை அபிவிருத்தி செய்ய உறுதி கொண்ட ஜனாதிபதி: ஆளுநர் நா.வேதநாயகன்

Jaffna Mullaitivu Sri Lanka Nagalingam Vedanayagam NPP Government
By Sudaron Feb 11, 2026 03:33 PM GMT
Report

வளம் நிறைந்தும் வறுமையில் முதலிடம் வகிக்கும் முல்லைத்தீவு மாவட்டம், இந்த அரசாங்கத்தின் காலத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயமாக மிகப் பெரிய அபிவிருத்தியை அடையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று(11.02.2026) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அபிவிருத்தி நடவடிக்கை முன்னெடுப்பு

தொடர்ந்து பேசி அவர், 

வடக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பையும், இயற்கை வளங்களையும் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு பார்க்கப்படுகின்றது.

வன்முறையை தூண்டிய ஜே.வி.பி தலைவர்களை அச்சுறுத்திய மொட்டுக் கட்சி

வன்முறையை தூண்டிய ஜே.வி.பி தலைவர்களை அச்சுறுத்திய மொட்டுக் கட்சி

இருப்பினும், வறுமைச் சுட்டியில் இது முதலிடத்தில் இருப்பது வேதனையானது பின்தங்கிய நிலையிலுள்ள இந்த மாவட்டத்தை மீட்டெடுக்கும் பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் துரிதப்படுத்தப்படும்.

வடக்கை அபிவிருத்தி செய்ய உறுதி கொண்ட ஜனாதிபதி: ஆளுநர் நா.வேதநாயகன் | Government To Focus On Development In The North

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் வடக்கு மக்கள் மீது கொண்டுள்ள விசேட கரிசனையை, நாம் எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

கொக்கிளாய் புல்மோட்டை பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆய்வு அறிக்கையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்தால், பாலத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் ஜனாதிபதி மிகுந்த அக்கறையுடன் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இணையவழி மூலம் பணம் சம்பாதிக்கலாம்! பெருந்தொகை பணத்தை இழந்த பெண்

இணையவழி மூலம் பணம் சம்பாதிக்கலாம்! பெருந்தொகை பணத்தை இழந்த பெண்

வீதி புனரமைத்து தருமாறு கோரிக்கை

இது குறித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்,  முல்லைத்தீவு மக்களின் நீண்டகாலக் கனவாக இருந்த வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடக்கை அபிவிருத்தி செய்ய உறுதி கொண்ட ஜனாதிபதி: ஆளுநர் நா.வேதநாயகன் | Government To Focus On Development In The North

அதேபோன்று, முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து வசதி இல்லாமலிருந்த குறையும் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 'டி்ட்வா' பேரிடரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்கள் ஆகியனவற்றைப் புனரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தக்  கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.திலகநாதன், து.ரவிகரன், காதர் மஸ்தான், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சின் மேலதிக செயலாளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், அமைச்சுடன் தொடர்புடைய திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

திடீரென வந்திறங்கிய ஜனாதிபதி - பாதுகாப்பையும் மீறி சூழ்ந்து கொண்ட தொழிலாளர்கள்

திடீரென வந்திறங்கிய ஜனாதிபதி - பாதுகாப்பையும் மீறி சூழ்ந்து கொண்ட தொழிலாளர்கள்

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US