வவுனியாவில் தமிழக அரசின் உதவி பொருட்கள் வழங்கி வைப்பு(Photo)
தமிழக அரசினால் வழங்கப்பட்ட உதவி பொருட்கள் வவுனியா தாண்டிக்குளத்தில்
வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உதவி
தமிழக அரசினால் வழங்கப்பட்ட உதவி பொருட்கள் கடந்த 02ம் திகதி வவுனியாவிற்கு புகையிரதம் மூலமாக வந்தடைந்ததுள்ளது.
இந்த உதவி பொருட்கள் வவுனியா மாவட்டத்தில் உள்ள 102 கிராம சேவகர் பிரிவுகளிற்கு பிரித்து வழங்கப்பட்டிருந்தது.
உதவி பொருட்களை வழங்கும் செயற்பாடு
இந்தநிலையில் நேற்றையதினம் தொடக்கம் பல்வேறு கிராம சேவகர் பிரிவுகளில் இந்திய உதவி பொருட்களினை வசதியற்ற மக்களிற்கு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவகர் அலுவலகத்தில் குறித்த செயற்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
தாண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள வசதியற்ற 295 பேருக்கு 10 கிலோ கிராம் அரிசி பை வீதம் கிராம சேவகர் சி.ரவீந்திரன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஸ்ரீ.கீதாஞ்சலி ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை தமிழக அரசினால் வழங்கப்பட்ட உதவி பொருட்கள் மூலமாக வவுனியா
மாவட்டத்தில் 22250 குடும்பங்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



