புதிய அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!
அரச ஊழியர்களின் சம்பளத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கவுள்ளதாக முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. ஆனால் தற்போது தாம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறவில்லை என்று அவர்கள் மறுக்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
நீர்கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,''ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பொறுப்பேற்றபோது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது.
ஆனால், அவர் பதவியேற்ற பின்னர், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. நல்லாட்சியின் போதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. ஊதிய முரண்பாடுகளைக் களைய குழுக்கள் நியமிக்கப்பட்டன.
அரசாங்கம் ஏமாற்றக்கூடாது
பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.

ஆனால் தற்போது தாம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறவில்லை என்று அவர்கள் மறுக்கின்றனர்.
சுமார் 80 சதவீத அரச ஊழியர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். எனவே அவர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றக்கூடாது.''என கூறியுள்ளார்.
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri