கோவிட் கொடுப்பனவு வழங்கும் செயற்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விசனம்

Government Media People
By Independent Writer Jun 04, 2021 06:54 AM GMT
Report

நாடு முழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கும் மற்றும் சமுர்த்தி முத்திரை இல்லாத வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கும் குறித்த ஒரு திகதியில் கோவிட் கொடுப்பனவு வழங்க இருப்பதாக அரசாங்கம் ஊடகங்கள் மூலம் அறிவித்தல் வழங்குகிறது.

இந்த நிலையில் அரசாங்கம் கொடுப்பனவு வழங்குவதாக அறிவித்த திகதியில், மக்கள் கிராம சேவகர் அலுவலகங்களிலும் சமுர்த்தி அலுவலகங்களிலும் ஒன்று கூடுகின்றனர்.

ஆனால் அரசாங்கம், தாங்கள் அறிவித்த திகதிகளில் கொடுப்பனவினை வழங்குவதற்கு ஏற்ற விதத்தில், உத்தியோகத்தர்களிடம் கொடுப்பனவுக்கான பணத் தொகைகளை வழங்குவதில்லை.

அரசாங்கம் அறிவித்த திகதிக்குப் பிந்தியே உத்தியோகத்தர்களின் கைகளுக்குக் கொடுப்பனவுக்கான பணத்தொகை கிடைக்கிறது.

இதனால் அரசாங்கம் அறிவித்த திகதியில் கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக சமுர்த்தி மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு செல்லும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

அத்துடன் அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு தொகை உத்தியோகத்தர்களது கைகளுக்கு வந்தும் அதனைத் தருவதற்கு உத்தியோகத்தர்கள் பின்னடிப்பதாகவும் ஏமாற்றுவதாகவும் நினைத்து, மக்கள் உத்தியோகத்தர்களுடன் முரண்படுகின்றனர்.

இதனால் உத்தியோகத்தர்களும் மக்களும் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US