தமிழர்களோடு சர்வாதிகாரமாக நடந்து கொள்வதை அரசு நிறுத்த வேண்டும் – டீ.டீ.வி.தினகரன்
தமிழ் மக்களின் எண்ணங்களில் உள்ள போராட்ட நினைவுகளை இலகுவில் அகற்றி விட முடியாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டீ.டீ.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது, கடும் கண்டனத்திற்குரியது.
இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல.
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது; கடும் கண்டனத்திற்குரியது. (1/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 9, 2021
இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது. (2/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 9, 2021