பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசு முழுமையாக நீக்கவேண்டும்! - சுமந்திரன் எம்.பி வலியுறுத்து (Photos)
"பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என அனைத்து இன மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆதரவு தெரிவித்து கையொப்பம் இடுகின்றனர். எனவே, இந்தச் சட்டத்தை அரசு முற்றாக நீக்க வேண்டும்." என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நகரில் இன்று கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது 40 ஆண்டுகாலமாகத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இடையிடையே சிங்கள இளைஞர்கள் தண்டிக்கப்பட்டனர். தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிக மோசமாக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகப் போராடுபவர்களை ஒடுக்குவதற்கும், இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கும் அரசு தயாராகி வருகின்றது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், என்பதே சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாகும். இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் இதனையே வலியுறுத்துகின்றனர்.
எனவே, இது மக்கள் கோரிக்கையாகும். அதனை அரசு நிறைவேற்ற வேண்டும்.நுவரெலியா
மாவட்டத்தில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது" - என்றார்.






கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 28 நிமிடங்கள் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam