முஸ்லிம்களின் எதிர்ப்பார்ப்புக்களை சிதைத்த அரசாங்கம்: எழுந்துள்ள கண்டனம்
இஸ்ரேலின் செயற்பாடுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய இலங்கையை சேர்ந்த இளைஞன் கைது செய்யபட்டமை, அரசாங்கத்திடம் முஸ்லிம் சமூகம் வைத்திருந்த எதிர்ப்பார்ப்புக்களை சிதைக்கும் விடயம் என முன்னாள் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இன்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க இந்நாட்டு முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பினை செய்திருக்கின்றார்கள்.
அப்பாவிகள் கைது
இருந்த போதிலும், அப்பாவி முஸ்லிம் இளைஞன் ஒருவரை ஒரு சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்து முதற்கட்டமாக பயங்கரவாத சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு சிறைப்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
இதேபோன்று தான் கோட்டாபயவின் அரசாங்கத்தில் வேண்டுமென்று குற்றஞ் சாட்டப்பட்டு பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
