இலங்கை தொடர்பான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை நிராகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைத் தொடர்பான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை நிராகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் வெளியிட்டிருந்த அறிக்கையில்,
இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலும், முன்னர் இடம்பெற்ற உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்காமை குறித்தும் தமது கவலையை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட படையதிகாரிகள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் இந்த அறிக்கையில் நிரூபிக்கப்படாத விடயங்கள் உள்ளதாக கூறி அதனை நிராகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.




