தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பழனி திகாம்பரம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மலையக மக்கள் தொடர்பில் ஜனாதிபதியே அதிகம் கதைத்திருந்தார்.
காணி உரித்து
எனவே, பண்டாரவளையில் அசல் காணி உரித்து வழங்கப்படும் என நம்பி இருந்தேன். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை.கடசாதி ஆவணமே கையளிக்கப்பட்டுள்ளது.
2015 இல் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பமானது. ஒரிஜினல் டீட் வழங்கப்பட்டது. இது பொய்யென ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் விமர்சித்திருந்தார். ஆனால் அவர்களின் ஆட்சியின்போது அவர் அதனையே வழங்கினார்.
நல்லாட்சி காலத்தில் எல்லோருக்கும் காணி உரிமை வழங்க முடியாமல் போனது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தற்போதைய ஜனாதிபதி ஆட்சியின்கீழ் எமது மக்களுக்கு காணி உரிமை வழங்க முடியும்.
10 பேர்ச்சஸை வழங்குமாறு நான் ஜனாதிபதியிடம் கோருகின்றேன். பண்டாரளையில் கட்டப்படும் வீடுகளுக்கும் விரைவில் அசல் உரித்து வழங்கப்படும்.
சம்பள உயர்வு
நல்லாட்சி காலத்திலேயே மலையக பகுதிகளில் அதிகளவான வீடுகள் கட்டப்பட்டன. அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றால் நல்லது. ஆனால் கம்பனிகள் இன்னும் பதிலை வழங்கவில்லை.
எனினும், வருட இறுதிக்குள் சம்பள உயர்வு கிடைக்குமென ஜனாதிபதி கூறுகின்றார். இதனை நான் நம்பவில்லை. தோட்டங்களை மக்களுக்கு பிரித்து கொடுத்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும்.
இந்திய வீட்டுத் திட்டத்தை விரைவில் நிறைவு செய்யுமாறு கோருகின்றேன். எமது மக்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியை வழங்கினால், அவர்களால் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள முடியும்.
அதுவே சிறந்த திட்டம். நாம் களவெடுக்கவில்லை. மக்களுக்கும் இது தெரியும். எனவே, அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். சில அமைச்சர்கள் பொய்யுரைப்பது தான் பிரச்சினை எனத் தெரிவித்துள்ளார்.





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
