மதுபோதையில் வாக்குவாதம்! ஒருவர் வெட்டிப் படுகொலை
ஆண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகல்கமுவ பகுதியில் நேற்று(12) இரவு இடம்பெற்றுள்ளது.
குடாகல்கமுவ - பெபொல்வெல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
படுகொலை
உயிரிழந்தவர் தனது சகோதரரின் வீட்டில் வேறொரு குழுவுடன் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, உயிரிழந்தவரைச் சகோதரர் வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
