ஜனாதிபதியோ பிரதமரோ எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை! அரசாங்க அச்சகர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ, பிரதமர் தினேஷ் குணவர்தனவோ தமக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என அரசாங்க அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவது தொடர்பில் ஜனாதிபதியும், உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவும் அழுத்தங்களை பிரயோகித்தனர் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என அரசாங்க அச்சகர் தெரிவிக்கின்றார்.
வாக்குச்சீட்டு அச்சிடல்
வாக்குச்சீட்டு அச்சிடுவது குறித்து பேசுவதற்காக தாம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தேவைகளுக்காக தாம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வதாகவும், அவ்வாறான ஓர் சந்தர்ப்பத்தை தொடர்புபடுத்தி இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
