சீனாவின் இயற்கை பசளை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வர தயாராகி வரும் அரசு- நளின் பண்டார
தாவரவியல் ஆய்வு நிலையம் அண்மையில் நிராகரித்த சீனாவின் இயற்கை பசளை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வரத் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
தற்போது பசளையை ஏற்றிய கப்பல் சிங்கப்பூரிலிருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றது.
இந்த பசளை தொகையை இறக்கிக்கொள்ளுமாறு சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. சீனாவின் அழுத்தம் காரணமாக அதனை இலங்கையில் இறக்கத் திட்டமிட்டுள்ளனர்.
சீனாவின் பசளையில் பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்து நுண்ணுயிர்கள் மற்றும் மல கழிவுகள் இருப்பதாகக் கூறி, ஆய்வு நிலையம், அதனை இறக்குமதி செய்ய வேண்டாம் என நிராகரித்திருந்தது.
சீனாவிலிருந்து கொண்டு வரப்படும் மல கழிவுகள் அடங்கிய, இலங்கையின் மண்ணுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும், குப்பையான பசளையை இலங்கையில் உள்ள பயிர் நிலங்களில் பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் என உழவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் இந்த குப்பை பசளை இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri