தையிட்டியில் 2 ஏக்கர் காணியை விடுவிக்க அரசு திட்டம்
யாழ். தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில், அண்ணளவாக இரண்டு ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
திஸ்ஸ விகாரைக்காக அண்ணளவாக 8 ஏக்கர் வரையான பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.
காணிகளை விடுவிக்க நடவடிக்கை
குறித்த காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த பல வருடங்களாக மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகவே, தற்போது அண்ணளவாக 2 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
எல்லை அமைக்கும் பணி
8 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.
காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் எல்லை அமைக்கும் பணிகளுக்காக ஒருதொகுதி நிதியும் கிடைத்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் நம்பப்படுகின்றது.
சன் டிவியில் கணவன், ஜீ தமிழில் மனைவி என நடிக்கும் ரியல் சீரியல் ஜோடிகள்... யாரெல்லாம் பாருங்க Cineulagam
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri