அரசுடைமையாக்கப்பட்ட போதைப் பொருள் வர்த்தகரின் பேருந்துகள்
போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு பேருந்துகளை அரசுடைமையாக்குமாறு கம்பஹா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கம்பஹா அருகே பெம்முல்லை பொலிஸார் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவருக்கு எதிரான வழக்கில் அவரது இரண்டு பேருந்துகளையும் கைப்பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
வழக்கு விசாரணை
இந்நிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி, பொலிஸாரினால் கையகப்படுத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் இரண்டு பேருந்துகளையும் பொதுமக்கள் பாவனைக்கு ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் குறித்த பேருந்துகள் இரண்டும், கம்பஹா இலங்கை போக்குவரத்துச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தவுள்ளதாக டிப்போ முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |