"இந்த அரசாங்கத்தை அடுத்த இரண்டரை வருடங்களுக்கு வீழ்த்த முடியாது" : நாமல் ராஜபக்ச (Video)
"இந்த அரசாங்கத்தை அடுத்த இரண்டரை வருடங்களுக்கு வீழ்த்த முடியாது" என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வீதிகளில் எத்தனை ஆர்ப்பாட்டங்களைச் செய்தாலும் , தீர்மானங்களை எடுப்பது நாடாளுமன்றம் என்றால் நாடாளுமன்றில் அது தொடர்பில் பேசுங்கள். இந்த அரசாங்கத்தை இரண்டரை வருடங்களுக்கு வீழ்த்த முடியாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு அடுத்த வாரத்தோடு 2 வருடங்கள் நிறைவடைகின்றது. இன்னும் ஒன்றரை வருடங்கள் வரை அவர்களே கொண்டுவந்த அரசியலமைப்பின் படி அரசாங்கத்தை எப்படியும் கலைக்க முடியாது.
கடந்த காலங்களில் ஒரு வருடத்தில் அரசாங்கத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு முடியும். அந்த முறையை நல்லாட்சி அரசாங்கம் 5 வருடங்களாகியது. பின்னர் எமது அரசாங்கத்தில் அதனை இரண்டரை வருடங்களாக மாற்றியமைத்தோம்.
அப்படியென்றால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாவிட்டால் ஏன் வீதிக்கு இறங்கி கொரோனாவை பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் இறுதி பிரதிபலன் என்ன? இந்த ஆர்ப்பாட்டங்கள் இறுதி பிரதிபலன் தான் கொரோனா 4ஆவது அலையை உருவாக்குவது. வேறு எந்த காரணமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |