யுத்தத்துக்கு வாங்கிய கடன்களால் மாட்டிக்கொண்ட இலங்கை அரசு (Video)
இலங்கை அரசங்கம் இக்கட்டான பொறிக்குள் சிக்குவதற்கு யுத்தத்துக்கு வாங்கிய கடன்களே காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளனர்.
அப்பதிவினூடாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் திறந்த பொருளாதார கொள்கை கொண்டுவரப்படும் வரை நாட்டின் பொருளாதாரம் ஒரு ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் முடிவடைந்த பின்னர் ஒரு மோசமான நிலைமை காணப்பட்டது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இல்லாத ஒரு எதிர்கனிய நிலைக்குச் சென்ற நிலைமையை பார்க்கமுடிந்தது.
பொதுவாக ஒரு யுத்தம் முடிவடைந்தவுடன், நாட்டின் அரசியல் ஸ்திரத் தன்மை வந்துவிடும், நேரடி முதலீடுகள் வந்துவிடும் என்ற நிலைதான் பொதுவாகக் காணப்படும். இலங்கையைப் பொறுத்தவரை இந்தநிலைமை முழுமையாக மாறி காணப்பட்டது.
காரணம், புலம்பெயர் நாட்டில் அமைப்புகள் ஏற்படுத்திய பிரசாரங்கள், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் என்பவற்றின் தாக்கங்களாகவே இருக்கலாம்.
இருப்பினும் 2001இல் இருந்து நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்துக்கொண்டு செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதிலும் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வரும்போது 7.6 பில்லியன் வெளிநாட்டு நாணயம் கையிருப்பிலிருந்தது.
ஆனால் இப்போது 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் 2.3 பில்லியன் வெளிநாட்டு நாணயம் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்காடுகிறது.
இது இலங்கையைப் பொறுத்தவரை மிகவும் மோசமான நிலை'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.



