பொருட்களின் விலை உயர்வைக்கூட இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை - இராதாகிருஷ்ணன்
"பொருட்களின் விலை உயர்வைக்கூட இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் விலையை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. அப்படியானால் அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராகிருஷ்ணன் (V.Rathakirushnan) கேள்வி எழுப்பியுள்ளார்.
நுவரெலியா - தலவாக்கலையில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
மாகாணசபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்படும் என நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேர்தல் என்பது ஜனநாயக அம்சம். எனவே, தேர்தல் நடைபெறுவதை நாம் வரவேற்கின்றோம். ஆதரவையும் வழங்குவோம். இந்தியாவின் அழுத்தத்தாலேயே தேர்தல் நடத்தப்படுகின்றது.
ஆனாலும் அவ்வாறு இல்லை என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். எம்மை பொறுத்தமட்டில் சர்வதேச அழுத்தத்தாலேயே தேர்தலுக்கான ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை, முன்னரெல்லாம் வரவு - செலவுத் திட்டம் வரும்போதுதான் பொருட்களின் விலை மறுசீரமைக்கப்படும். ஆனால் இன்று நாளாந்தம் அதிகரிப்பு இடம்பெறுகின்றது.
இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களுமே விலையை நிர்ணயிக்கின்றனர். அப்படியானால் அரசாங்கம், அமைச்சரவை எதற்கு" என தெரிவித்துள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
